பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை மாற்றியமைத்துள்ளது.
இந்நிலையில் உலக வாழ் மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கை பயன்படுத்துவது அதிகம்.
குறித்த பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை மெட்டா என மாற்றியமைத்துள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் இடம்பெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாட்டில் அதன் இணை நிருபர் மார்க் ஸக்கர்பெக், இந்தப் பெயரை மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் குறித்த பெயர் மாற்றமானது தனது தனிப்பட்ட தளங்களான பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் என்பவற்றிற்கு பொருந்தாது எனவும் தாய் நிறுவனத்திற்கு மாத்திரமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் ஊழியர் ஒருவரினால் கசிந்த ஆவணங்களின் பிரகாரம் ஃபேஸ்புக் தொடரில் எதிர்மறை தகவல்கள் வெளியான நிலையில் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
