திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாலியபுர கிராமம் பன்சார் அபிவிருத்தி சார் கிராமமாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
அதற்கிணங்க தெரிவு செய்யப்பட்ட 36 பயனாளிகளுக்கான தையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (26) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
இதற்காக 5 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளது.உற்பத்திசார் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி,தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி, தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



