கொவிட் தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில்
எதிர்வரும் டிசம்பர் மாதம் மீண்டும் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் அமுல்ப்படுத்தப் பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் பொது மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களையும் உரிய வகையில் கடைப்பிடிப்பதில்லை.
இதனடிப்படையில் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் எஸ். யூ.டி .குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெரும்பாலான மக்கள் கொவிட் பரிசோதனைகளைச் செய்துகொள்வதை நிராகரித்துள்ளதாகவும் பொது சுகாதார சங்கத்தின் உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



