மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உந்துருளி ஒன்றும் மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



