சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக மழை.

0

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
அடுத்த 7 நாட்களுக்கு தொடர்ச்சியாக அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்தளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி இடம் பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த காற்றழுத்தம் மேற்கு வங்க கடல் மத்தியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிக்கு நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் பெற்றுள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழை பெய்யும்.

மேலும் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதனால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply