வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளைபூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் டொக்டர் அதி . வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களைத் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, இறுதிக் கிரியைக்கான நிகழ்வுகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவர் தனது 84 ஆவது வயதில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



