இலங்கையில் தொடர்ந்தும் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு!

0

இலங்கையில் தொடர்ந்தும் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் சீனி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் தேவையான டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு இன்று அல்லது நாளே தினத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய இவர்கள் தங்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரி நேற்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்து இருந்தனர்.

அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநருடன் இன்று அல்லது நாளைய தினத்திற்குள் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத் தருவதாக இராஜாங்க அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் விடுவிக்கப்படாத சுமார் 200 சீனி கொள்கலன்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

அவ்வாறு சீனி இறக்குமதிக்காக18 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இதற்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் இறக்குமதியாளர்கள் இராஜாங்க அவரையும் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பிரகாரம் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 122 ரூபாவுக்கும் , ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 125 ரூபாவிற்கும் விற்பனை செய்வதற்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் சில வர்த்தகர்கள் கடைபிடித்துள்ளதாக இந்த சந்திப்பின்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply