சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது.
இதற்கமைய சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தீர்மானித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் நிலவிய டொலர் கட்டுப்பாடு காரணத்தினால் சீனி இறக்குமதியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மீண்டும் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் ஒரு கிலோ நெய் சீனி 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



