நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
விதிக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி குறித்த பாடசாலைகள் ஆரம்பிக்க படுவதுடன் அதற்குரிய சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் சீருடையில் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு வருட காலத்திற்கு மேலாக நாட்டில் ஏற்பட்ட கொவிட் அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் சில மாணவர்களின் சீருடைகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் அளிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



