நடத்துனர்கள் இன்றி பேருந்து போக்குவரத்தினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
இதற்கமைய பேருந்து நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்கள் இன்றி பயணிகள் போக்குவரத்திற்காக பேருந்துகளை பயன்படுத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை திருத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது நாட்டில் பரவிய கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் பேருந்து தொழில்துறையின வருமானம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆகவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டு இந்த யோசனை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



