வட்டமடு பிரதேசத்தில் விவசாயி ஒருவரின் பண்ணையில் மிளகாய் அறுவடை.

0

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட வட்டமடு பகுதியில் என்.சி.என். நஷாஹிர் என்கின்ற விவசாயி ஒருவரின் ஒருங்கிணைந்த பண்னை ஒன்றினை விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கிழக்கு மாகான விவசாய பணிப்பாளர் உற்பட திணைக்கள உத்தியோகத்தர்களும் பார்வையிட்டதுடன், மிளகாய் அறுவடயினையும் (18)ஆரம்பித்து வைத்தனர்.

அங்கு சுமார் 10 ஆயிரம் மிளகாய் செடிகள் நடப்பட்டுள்ளதாகவும், நவீன தொழிநுற்பத்தை பயன்படுத்தி பயிரிடப்பட்ட மிளகாய் செய்கையின் முதல் அறுவடையின் போது சுமார் 550 கிலோ மிளகாய் பெறப்பட்டது.

இப்பயிர்கள் சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் 45 நாட்களின் பின்னர் நேற்று முதலாவது அறுவடை இடம்பெற்றுள்ளது.

இப்பயிர்களுக்கான சேதன திரவப் பசளை உற்பத்தியும் பன்னையிலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாகவும், சிறிதளவு அசேதனப்பசளை பயன்படுத்தப்படுவதாக உரிமையாளர் குறிப்பிடுகின்றார்.

குறித்த மிளகாய் அறுவடை மாவட் பிரதி விவசாய பணிப்பாளர் பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றதுடன் விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர், மிளகாய் செய்கைக்கான திட்ட பணிப்பாளர், கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்களின், உத்தியோகத்தர்களின், மற்றும் விவசாயிகளின் பங்கு பற்றுதல்களுடன் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் செத்தல் மிளகாய் உற்பத்தியை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

அதே போன்று இங்கு கோழி மற்றும் ஆடு வளர்ப்பு இடம்பெறுவதோடு அவைகளுக்கான தீனிகளாக சோளச் செய்கையும் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply