இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 13,058 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,52,454 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 58 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply