வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதனை உறம் தயாரிக்கும் செய்முறை.

0

ஜனாதிபதியின் “சௌபாக்கியா” தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நஞ்சற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இயற்கை உணவுப் உற்பத்தி அதிகரிப்பதற்கான செயற்பாடுகளின் கீழ் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனம் மற்றும் தமிழ் போரம் மலேசியா ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதனை உறம் தயாரிக்கும் செய்முறை அடங்கிய பயிற்சிகள் நேற்று (18) வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாவடிச்சேணையில் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலமையில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய வேலைத்திட்டத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகளில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா மற்றும் திருகோணமலை மக்கள் சேவை மன்றம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு கட்டமாக வெருகல் பிரதேசத்தில் உள்ள 30 விவசாயிகளுக்கு வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்க சேதனை உரம் தயாரிக்கும் தொழிநுட்பரீதியான பயற்சிகளை நிலாவெளி மற்றும் வெருகல் பிரதேச கமநல சேவைகள் நிலைய போதனாசிரியர்களான வாஜித் மற்றும் லுஜிதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான பயிற்சிகளை வழங்கி வைத்தனர்.

இயற்கையாக கிடைக்கூடியதும் உக்ககூடியதுமான வாழைத்தண்டு, வைக்கோள், வீட்டுக் கழிவுகள் கொண்டு விரைவாகவும், இலகுவாகவும் கூட்டெரு உற்பத்தி செய்யும் குவியல் முறையிலான சேதனை உறம் தயாரிக்கும் பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டதுடன் சேதன உறத்தின் பயன்பாடு அதன் முக்கியத்தவம் தொடர்பிலும் தெளிவுட்டல்களும் விவசாயிகளுக்கு இதன் போது வழங்கப்பட்டது. தொழிநுட்ப ரீதியாக தயாரிக்கப்பட்ட சேதனை பசளைகள் அடங்கிய பொதிகள் விவசாயிகளுக்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply