சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க கோரிக்கை!

0

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தையில் மீண்டும் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

இதன் பிரகாரம் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் கடந்த சில நாட்களாக சீனி தொகை பதுக்கப்பட்டிருந்தமையினால் ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூபாவாக அதிகரித்திருந்தது.

இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் பல சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு அந்த சீனி தொகை மீட்கப்பட்டதன் பின்னனர் அரசாங்கத்தினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 122 ரூபா என கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இருப்பினும் தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 135 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிவப்பு சீனி ஒரு கிலோ 125 ரூபாய் என கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட போதிலும் சந்தையில் 135 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply