
ஒரு காலத்தில் ஏ.சி. என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. இன்று பெரும்பாலான அலுவலகங்கள் எல்லாமே ஏ.சி. வசதியுடன் தான் செயல்படுகின்றன. பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் என்று எல்லாமே ஏ.சி.யாக அவதாரம் எடுத்திருக்கிறது.

ஏசி அறைகளில் வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பிரச்சினைகளும், நோய்களும் உண்டாவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏ.சி.யில் இயற்கையான காற்று கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதை பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. மேலும் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது.

ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏ.சி. காற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும். அலர்ஜி உள்ளவர்கள் ஏ.சி.யில் இருந்து விலகி இருப்பதே நல்லது.

குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏ.சி.யில் படிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அவற்றில் ‘லிஜினல்லா நிமோபிலியா’ என்ற பாக்டீரியா வளரும். இது ஏ.சி.யில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப் பாதையில் இந்த வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. – Source: eenaduindia
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



