கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

0

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சில விதிமுறைகள் சுகாதார தரப்பினரால் அறிமுகப்படுத்தப்படுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை முறைகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகதர வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசியமாக நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

அந்த சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மேலதிகமாகத் திருமணங்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் ஒன்று கூடினால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுளளார்.

Leave a Reply