9 மாவட்ட ஊரக உள்ளுராட்சி தேர்தல் வாக்கு எண்ண்ணும் நடவடிக்கை ஆரம்பம்.

0

9 மாவட்ட ஊரக உள்ளுராட்சி தேர்தல் வாக்கு எண்ண்ணும் நடவடிக்கை நேற்றைய தினம் முதல் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைய 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர்,2,779 கிராம ஊராட்சி தலைவர் , 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்கு பதிவு கடந்த 6, 9 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்தல் முறையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி எழுபத்தி நான்கு மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

அத்துடன் ஏனைய மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

இவற்றை விட 2,874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர்,5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இரவு முழுவதும் குறித்த வாக்கு எண்ணும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

மேலும் இரவு 2 மணி வரையில் வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply