சுத்தமான குடி நீரின்றி தவிக்கும் கிராம மக்கள்!

0

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பச்சைநூர் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கான சுத்தமான குடி நீர் இன்றி வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப காலம் தொட்டு மஞ்சல் நிற கிணற்று நீரை பருகியே பல தரப்பட்ட வயிற்று சம்மந்தமான நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இக் கிராமத்தில் சுமார் 35 க்கும் அதிகமான குடும்பங்கள் நாளாந்த கூலித் தொழிலை நம்பி வாழ்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

குடி நீரினை பெறுவதாக இருந்தால் அயல் கிராமமான மணல் சேனை கிராமத்துக்கு ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக நீரை பெறுவதாக இருந்தால் குறித்த அயல் கிராம கோயில் உண்டியலில் விரும்பிய தொகை பணத்தை போட்டு விட்டே நீரை பெற்று துவிச்சக்கர வண்டி மூலமாகவும் முச்சக்கர வண்டி ஊடாக பெறுவதாக இருந்தால் 200 ரூபா வரை கொடுத்தே குடி நீரை பருக வேண்டி உள்ளது.

பாடசாலை பிள்ளைகளின் ஆடைகள் உட்பட பல தேவைகளுக்காக இம் மஞ்சல் நிற கிணற்று நீரையே பாவிக்க வேண்டியுள்ளது.பல முறை உரிய அதிகாரிகளிடத்தில் குடி நீருக்கான கோரிக்கைகளை முன்வைத்த போதும் இற்றை வரைக்கும் தீர்வு எட்டப்படவில்லை. தொடராக ஏமாற்றமடைந்தது மாத்திரமே மிச்சம் சுத்தமான குடி நீர் இன்மையால் வயிற்றில் கல்,வாந்தி பேதி சிறு நீரக நோய் போன்றனவும் ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் கிராம மக்களுக்கு சுத்தமான குடி நீரினை பெற்றுத் தருமாறு அப் பிரதேச மக்கள் உரியவர்களிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply