விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை திறக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து நிலையில் குறித்த தொற்றால் ஏற்படும் தாகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
இதன் காரணத்தால் கோவையைச் சேர்ந்த ஆர். பொன்னுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதாவது வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
வருகின்ற 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகின்றது.
அன்று தமிழக அரசு உத்தரவின்படி கோவில்கள் திறக்கப்பட மாட்டாது.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை திறக்க அரசு அனுமதிக்கின்றது.
ஆனால் துர்க்கையை வழிபடும் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் அரசு பிடிவாதமாக செயற்படுகின்றது.
ஆகவே விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதற்கு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வரவுள்ளது.



