இன்று முதல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய யாழ் பல்கலைக்கழகத்திலும் குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் வழிகாட்டுதலில் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தடுப்பூசி இடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் வதியும் வெளியிடப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இந்த தடுப்பூசியினை பெற்றுக் கொண்டனர்.



