கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலைகள் காரணத்தினால் மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க கூடியதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கான விசேட பஸ் சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



