9A சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு.

0

2020 கல்வி ஆண்டில் 9A சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வை கிண்ணியா வலயக் கல்வி அலுவலகமும் கலீலா உம்மா பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எ.அனஸ்,கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்,கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. நஸுஹர்கான்,கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஷ்வி, நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.எப்.ஏ.மரைக்கார் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள்,சித்தி எய்திய மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு இளம் சமூக சேவையாளர் முஹமட் முஹைடீன் பைஷல் தலைமை தாங்கியதோடு 9A சித்தி பெற்ற 20 மாணவர்களுக்கு 5000 ருபா சன்மானமும் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply