இன்று முதல் புதிய விலையில் சந்தைக்கு வரும் பால் மா.

0

இன்று முதல் புதிய விலையில் சந்தைக்கு பால் மா இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட பால் மா தொகையே புதிய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மா பொதியின் விலை 1,195 ரூபாவாகும்.

அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் 400 கிலோ கிராம் பால் பொதியின் விலை 480 ரூபாவாகும்.

அத்துடன் சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கமைய 50 கிலோ கிராம் நிறையுடைய சிமெண்ட் மூட்டையின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என சீமெந்து விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விலை 100 ரூபாவினால் மாத்திரம் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் 50 கிலோ கிராம் நிறையுடைய சிமெண்ட் மூட்டையின் விலை 96 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.

Leave a Reply