இலங்கையின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை!

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அவ்வாறு மத்திய மலைநாட்டின் நேற்று சரிவு பகுதியிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply