எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் என்பன ஒத்திவைக்கப்படலாம் என கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தால் குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே பரிட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த இரு பரீட்சைகளும் பெரும்பாலும் 2022ஆம் ஆண்டு முற்பகுதியிலேயே இந்த பரிட்சைகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



