தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பரிசு பொதியா?

0

கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி மாபெரும் கொவிட் தடுப்பூசி முகாமினை நடத்துவதற்கு திட்டமிடப்படுள்ளது.

இதற்கமைய குறித்த நிகழ்வினை முன்னெடுப்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது .

இதற்கமைய கரூர் மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிலையில் வருகின்ற 10ஆம் திகதி 5 ம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.

அத்துடன் இந்த கணக்கெடுப்புக்கென்று வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இந்த வாக்குச்சாவடி அளவில் நியமிக்கப்பட வேண்டும்.

குறித்த கணக்கெடுப்பாளர்கள் தடுப்பூசி முகாம் எத்தனை நபர்களை அழைத்து வருகின்றார்களோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு நபருக்கு 5 வீதம் கணக்கெடுப்பாளர் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.

மேலும் அன்று முகாமில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மெஷின், இரண்டாம் பரிசாக கிரைண்டர், மூன்றாம் பரிசாக மிக்ஸி, நாங்க பரிசாக 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 நபர்களுக்கு பாத்திரங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply