இலங்கையின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை!

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் கிழக்கு, மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும்.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply