புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு!

0

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்ட மூலம்இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கமைய இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி கனிய எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்தியை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு தேவையான சட்ட பின்னணி மற்றும் கட்டுப்பாட்டு முறையை தயாரிப்பதற்கும்

அவ்வாறு கனிய எண்ணெய் துறையில் பாரிய முதலீட்டை இலங்கையின் கனிய எண்ணெய் வள ஆய்விற்காக ஈர்ப்பதற்கும் இந்த சட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சட்ட மூலத்தில் உரிய மற்றும் சுயாதீன கட்டுப்பாட்டு அதிகாரங்களுடன் இலங்கை கனியவளம் அபிவிருத்தி சபை அமைப்பதே இதன் பிரதான நோக்கமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply