இலங்கையில் இன்று ஆசிரியர் தினம்!

0

உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு திகதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும்..

இதன் பிரகாரம் இலங்கையில் அக்டோபர் 6 ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதற்கமைய கல்வி தொடர்பில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளில் நினைவுகூறும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

அத்துடன் ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர் அதிபர்களின் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டம் 87 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் நாடளாவிய ரீதியில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply