உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக குறிப்பிடப்படும் எவர் ஏஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

0

எவர் கிரீன் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக குறிப்பிடப்படும் எவர் ஏஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கை நேரப்படி நேறைய தினம் இரவு 11.04 அளவில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அத்துடன் இந்த கப்பல் 400மீற்றர் நீளமும்,62 மீற்றர் அகலமும் கொண்டதுடன் 23,992 கொள்கலன்களை கொண்டு செல்லும் சக்கிதிவாய்ந்தது.

இவ்வாறான பாரிய கொள்கலன் கப்பல்களை கையாளக் கூடிய 24 துறைமுகங்கள் உலகில் உள்ளன.

மேலும் அந்த கப்பல் தெற்காசியாவில் நங்கூரமிடக் கூடிய ஒரே ஒரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

Leave a Reply