மகாளய அமாவாசை தினத்தன்று புண்ணிய தலமான ராமேஸ்வரம் உட்பட கடலோர பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் குடும்ப நலனுக்காக சிறப்பு பூஜைகள் செய்தும் கோவில்களில் வழிபாடுகளில் கலந்து கொள்வதை பக்தர்கள் ஐதீகமாகக் கருதுவர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நாளை மறுநாள் மகாளய அமாவாசை ஆகும்.
குறித்த நாட்களில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள புண்ணியத் தலங்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – பூஜை செய்து அன்னதானம் வழங்குவது குடும்ப நலனுக்கு நல்லது என கருதி இந்த வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
மேலும் அமாவாசை நாளன்று பக்தர்கள் அதிகமாக ஒன்று கூடுவார்கள் என்பதால் கொவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக அமாவாசை நாளுக்கு முந்திய நாளுக்கும் , அமாவாசை நாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் பக்தர்கள் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் அமைந்துள்ள சிவ தளமான ராமேஸ்வரத்தில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித நீரான அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி சிறப்பு பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி இல்லை.
இதனால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் இன்று ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அவ்வாறு மீண்டு வியாழக்கிழமை மாத்திரமே கோவில் திறந்திருக்கும் என்பதும் குன்றிப்பிடத்தக்கது.



