தமிழகத்தில் இன்று முதல் அரச பேருந்துகளில் முன்பதிவினை மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இம்முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால் அடுத்த நாட்களான வெள்ளி. சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கும்.
இதனால் வெளியில் பயணிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
இதற்கமைய நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இருப்பதால் ரயில்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
ஆகவே பொது மக்கள் அனைவரும் http://tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் குறித்த பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



