இங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.

0

இங்கையில் டெங்கு நோய் தொற்றால்பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகதொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 28,025டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருந்தனர்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 12,916 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 1,208 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனனர்.

இம்முறை 428 நோயாளர்கள் மாத்திரமே பதிவாகி உள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply