நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் சாதாரணமான விலையில் விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு நேற்றைய தினத்தினை போன்று இன்றும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் ஆர்.என் பண்டார குறிப்பிட்டுள்ளார்.



