பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்.

0

கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 200 க்கு உட்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நேற்று (30)இடம் பெற்றது.

மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கொரோனா நிலவரங்கள் தொடர்பிலும் எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன இதில் மாவட்ட செயலாளர்கள் சுகாதாரத்துரை பிரதிநிதிகள் வலயக் கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இணையவழி தொழில் நுட்பம் ஊடாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதை.

இதன் போது கருத்து தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கிழக்கில் கொவிட் தொற்று மற்றும் மரணங்கள் குறைந்தாலும் பயணத் தடை நீக்கப்பட்டதன் பின் மக்களின் நடமாட்டம் அதிகரிக்ககூடும் இதனை கட்டுப்படுத்துவது மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

கொவிட் புதிய புரள்வுகள் ஏற்பட்டால் தொற்று அதிகரிக்க கூடும். தடுப்பூசி நடவடிக்கைகள் கிழக்கில் வெற்றிகரமாக இடம் பெற்றுவருகிறது 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி 90 வீதம் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவது டோஸ் 80 வீதமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு 95 வீதம் வழங்கப்பட்டுள்ளது இதன் காரணமாக நோய் தாக்கம் குறைவடைந்துள்ளது.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது சுகாதார நடை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க முன் பழைய மாணவர்கள் இணைந்து டெங்கு பரவா வண்ணம் சுத்தம் செய்தல்,டெங்கு புகை விசிரல் நடவடிக்கைகளை சுகாதார திஙைக்களம் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியினை பெற்று மேற்கொள்ளல், மாணவர்கள்,பெற்றோர்களுக்கு கொரோனா டெங்கு தாக்கம் தொடர்பிலான விழிப்புணர்வுகளை வழங்குதல், மாணவர்களுக்கு கைகழுவுதல் மாஸ்க் அணிதல் தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்க்க வலியுறுத்தல், வகுப்பறைகளில் சமூக இடைவெளிகளுடன் கூடிய காற்றோட்டமாக இருக்கைகளை ஏற்படுத்தல், பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளை மூடி வீட்டில் இருந்து உணவுகளை எடுத்துவர வைத்தல், தடுமல் இருமல் ஏற்படின் மாணவர்களை பாடசாலைக்கு வரவழைக்காது முதலுதவி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,

தடுப்பூசி பெறாத ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் இருப்பின் உடனடியாக தடுப்பு மருந்துகளை பெறுதல்,அரசின் சுற்றரிக்கை வரும் வரை பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்தல் போன்றவற்றை கடைப்படிக்குமாறும் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply