இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

0

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இதற்கமைய நாடு பூராகவும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது

இருப்பினும் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறவில்லை.

ஆனால் தற்போது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகிறது.
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 94.45 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58-க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94.74-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply