தவறவிடப்பட்ட மேலும் 505 கொவிட் தொற்றாளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த 7 நாட்களில் தவறவிடப்பட்ட தொற்றாளர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான 7 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 517,882 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



