சிறுவர்களை நீதிமன்றத்திற்கு சாட்சியாளர்களாக அழைப்பதை தடுக்க விசேட வேலைத்திட்டம்.

0

சிறுவர்களை நீதிமன்றத்திற்கு சாட்சியாளர்களாக அழைப்பதை தடுக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது.

இதற்கமைய சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றத்திற்கு அழைப்பதை தடுக்கும் சட்டத்தையடுத்து காணொளி தொழில்நுட்பம் மூலம் சிறுவர்களுடன் தகவலை பெற்றுக்கொள்வதற்கான விசேட கூடம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோகண குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் சிறுவர்கள் தொடர்பான குற்றவியல் வழக்குகளின் போது நபர்களின் சாட்சியங்களை விடவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்களை பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply