இன்று முதல் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

0

இன்று முதல் மீண்டும் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தனிப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்
இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த நிலையில் அரச சேவைகளை வழமைபோன்று முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய அத்தியாவசிய அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பொது சேவைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply