இந்தியாவின் அதானி குழுமத்துடன்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் உள்நாட்டு முகவரான ஜோன் கீல்ஸ் ஹொல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இந்தியாவின் அதானி குழுமம் நிர்மாணித்தல் , செயல்படுத்தல், பரிமாற்றல் அடிப்படையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும் இந்த உடன்படிக்கையில் 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது



