தென்னிந்திய திரையுலகில் லத்திகா படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன்.
தற்போது இவர் பிக்கப் டிராப் படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகின்றார்.
குறித்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதாவது படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை படக்குழுவினர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



