ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

0

கிழக்குமாகாண கல்வி செயலாளர் மற்றும் கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சேவை சங்க கிழக்கு மாகாணம் செயலாளர் ந. ஜெயதீபன் மற்றும் கிழக்குமாகாண தமிழாசிரியர் சங்க செயலாளர் நிரஞ்சன் ஆகியோருடனான வருடாந்த இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று) இடம்பெற்றது.

மேலும் இங்கு கலந்துரையாடலின்படி 2019 ம், 2020 ஆம் ஆண்டிற்கான இடமாற்றங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை இதனை உடனடியாக நடைமுறைப் படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது .

மேலும் இவ் இடமாற்றம் இடை நிறுத்தப்பட் தற்கு காரணம் கிழக்கு மாகாண கல்வி செயலாளரின் தலையீடு தான் என்றும் மற்றும் சமூக பொது ஊடகங்கள் வழியாகவும் அறியக்கூடியதாக உள்ளதெனவும் வினவிய போது செயலாளர் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் .

இவ் இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டதற்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது இன்றைய கலந்துரையாடலில் எமக்கு பூரண தெளிவு கிடைக்கப்பெற்றது

இடமாற்றமானது சில வலயங்களில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அவ் வலயங்களை மாத்திரம் ஆசிரியர்களை சமப்படுத்தும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யுமாறும் உரிய வளையங்கள் தவிர்ந்த ஏனைய வளையங்களின் ஆசிரியர் இடமாற்ற பட்டியலை வெளியிட வேண்டுமெனவும் தாம் கூறியதாகவும் இன்று கிழக்குமாகாண கல்விச செயலாளர் எமக்கு தெரிவித்திருந்தார்

ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இடமாற்ற பெயர் பட்டியலை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண கல்விச செயலாளர் குறிப்பிட்டிருந்தார் அதனடிப்படையில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர்கள் தமது இடமாற்ற கடிதங்களை 2021/10/15ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள(நியமன கடிதங்களை ) முடியும் எனவும் 2022/01/01 திகதி தொடக்கம் தமது நியமன கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பாடசாலையில் கடமையாற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்த இடமாற்ற பிரச்சினைக்கான தீர்வினை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாக செயலாளரும் இன்று கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர்
நா.ஜெயதீபன் தெரிவித்தார்

Leave a Reply