பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்படுமா?

0

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கோதுமை மா பற்றாக்குறை காரணத்தினால் பேக்கரி பொருட்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சில கம்பெனிகள் மாவை பதுக்கி வைத்துள்ளதாகவும் குறித்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் தலையீடு இன்றி விலை அதிகரிப்புக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது சந்தையில் 87 ரூபாய் கோதுமை மா விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் சில இடங்களில் 107ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இதன் காரணத்தால் நாட்டின் சில பகுதிகளில் உள்ள பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply