ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கும் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கும் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய கட்சியின் தலைமையகமான தாருசலாமில் குறித்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளனர்.

கொழும்பில் இன்று மாலை இந்த சந்திப்புஇடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply