தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

0

மட்டக்களப்பு மாவட்ட தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார்.

இதற்கமைய நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி ,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 இல் கல்வி பயிலும் 13 வயது சிறுமியென காவற்துறையினர் தெரிவித்தனர்.

சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply