கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

0

தமிழகத்தில் நாளாந்தம் புதிய தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய குறித்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய கமிஷனர் ககன்தீப்சிங் பேடி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதாவது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப் படக்கூடாது.

உடனே வைத்தியசாலைக்கு சென்று அனுமதியாக வேண்டும்.

14 நாட்கள் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்படடுவோரின் வீடுகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள்.

தனியறை, கழிப்பறை போட்டு கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்த்து அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள்.

மேலும் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply