நாடு முழுவது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முதலில் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசேட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஸாமன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஏனைய மாகாணங்களிலும் காணப்படும் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு குறித்த தடுப்பூசியினை செலுத்தும் பணிகள் எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



