தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா அல்லது தளர்வினை ஏற்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று மு.க ஸ்டாலினால் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த கலந்துரையாடல் சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் அக்டோபர் 31ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தாலும் மேலும் சில தளர்வுகள் அளித்தல் தொடர்பில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்..
மேலும் வெள்ளி, சனி, ஞாயிறன்று வழிபாட்டுத்தலங்கள் தரிசனத்திற்கான தடையை நீக்க கோறுவது பற்றியும் குறித்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டவுள்ளது.



