முதலாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கலினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது.
இதற்கமைய வர்த்தக நோக்கத்துடன் பரப்பப்பட்டு வரும் மூட நம்பிக்கைகளுக்கு ஏமாற்றம் அடையாமல் குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒரு சிலர் கூறும் கருத்து கணிப்புக்கு எந்தவொரு விஞ்ஞானரீதியான அடிப்படையும் இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க தெரிவித்துள்ளார்..
இந்நிலையில் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத இவ்வாறான போலியான கதைகளுக்கு ஏமாற்றமடையாமல் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களையும் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
.மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரையில் 12 வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் விசேட நிபுணத்துவ மருத்துவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.



