இலங்கையில் மீண்டும் ஊரடங்கா?

0

இலங்கையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானிக்கப்படுள்ளது.

இந்நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து விடுவித்து இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு திறக்கப்படும்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply